சூர்யாவுடன் நடித்த ஈரான் நடிகைக்கு வினோத ஆசை
ஈரான் கவர்ச்சி நடிகைக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் போட்டதும் அவருடன் ஜோடி சேர ஆசை பத்திகிச்சாம். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் குத்தாட்டம் போடுவதற்காக ஈரானை சேர்ந்த மரியம் ஸகாரியா ஒப்பந்தம் ஆனார். அவர் கூறியதாவது: இந்தியில் தில் மேரா என்ற பாடலுக்கு கரீனா கபூருடன் ஏஜென்ட் வினோத் படத்தில் ஆடினேன். தமிழில் ஏற்கனவே நகரம் என்ற படத்தில் குத்தாட்டம் ஆடி இருக்கிறேன். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் குத்தாட்டம் ஆட கேட்டார்கள். சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். சூர்யா என்னிடம் மிகவும் நட்புடன் பழகினார். அவருடன் ஆடியபோது வேலை செய்கிறோம் என்ற சோர்வே தெரியவில்லை.
ஏற்கனவே பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இப்படத்தில் அவரது சகோதரர் ராஜு சுந்தரத்துடன் பணியாற்றினேன். நான் ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகை, நடனம் ஆடுவதில்தான் ஆர்வம். ஆனால் சூர்யாவுடன் ஆட்டம் போட்டபோது அவருடன் ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆசையும் பத்திக்கிச்சி. இவ்வாறு மரியம் ஸகாரியா கூறினார்.
No comments: