Header Ads

பாய்பிரண்டுடன் 5 வருடம் தொடர்பு மனம் திறந்தார் நீது சந்திரா

பாய்பிரண்டுடன் 5 வருடம் தொடர்பில் இருந்தேன் என்றார் நீது சந்திரா. யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. அவர் கூறியதாவது: நான் பீகாரை சேர்ந்தவள். போஜ்புரிதான் எனது தாய் மொழி. போஜ்புரி படங்கள் ஆபாசமானது என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. அதுபோன்ற படங்களுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. போஜ்புரி மொழி படத்தின் மீதான எண்ணத்தை மாற்ற நினைத்தேன். அதற்காக தேஸ்வா என்ற பெயரில் சொந்த படம் தயாரித்தேன். அப்படம் 8 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் போஜ்புரி படமும் இதுதான். 

என்னைப்பற்றி வரும் காதல் கிசுகிசுக்கள் பற்றி கேட்கிறார்கள். அதுபோன்ற கிசுகிசுவை நான் விரும்புவதில்லை. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் என்னைப்பற்றி கிசுகிசுக்கள் வந்ததில்லை. பாய்பிரண்ட் ஒருவருடன் எனக்கு 5 வருடமாக தொடர்பு இருந்தது. அவருடன் இணைத்துதான் என்னைபற்றி கிசுகிசுவரும். என்னைப் பொறுத்தவரை கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைப்பேன். ஒரு வேலையில் ஈடுபட்டால் நூறு சதவீதம் உழைக்க வேண்டும் அதைவிட்டு 99 சதவீதம் ஈடுபாடு காட்டினால் அது பூஜ்ஜியத்துக்கு தான் சமம். 

இவ்வாறு நீது சந்திரா கூறினார். நீது குறிப்பிட்ட அந்த பாய்பிரண்ட், பாலிவுட் ஹீரோ ரன்தீப் ஹூடா. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். 

No comments:

Powered by Blogger.