கோச்சடையான் டப்பிங் : கல்தா கொடுத்த தீபிகா
கோச்சடையான் இந்தி பதிப்பிற்கு டப்பிங் பேச திடீரென மறுத்துள்ளார் தீபிகா படுகோன். ரஜினி நடிக்கும் படம் கோச்சடையான். அவரது மகள் சவுந்தர்யா இயக்குகிறார். தீபிகா ஹீரோயின். இப்படத்தின் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்துவிட்டன. வரும் பிப்ரவரி மாதம் ஆடியோ ரிலீஸ் நடக்க உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டப்பிங் பணியும் நடந்தது. தீபிகா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசும்படி அவரிடம் கேட்டபோது, பிஸியாக இருப்பதால் வேறு ஒருவரை வைத்து பேசிக்கொள்ளும்படி தெரிவித்தார். இதையடுத்து அவரது கதாபாத்திரத்துக்கு பாடகி சின்மயி டப்பிங் பேசினார். இப்படத்தின் இந்தி பதிப் பிற்கு டப்பிங் பேசும்படி தீபிகாவிடம் கேட்கப்பட்டது. அப்போதும் அவர் பிஸியாக இருப்பதாக தெரிவித்தார். இது பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிர்ச்சியை தந்தது. இதையடுத்து டப்பிங் கலைஞர் மோனா கோஷ் என்பவர் தீபிகாவுக்கு பதிலாக டப்பிங் பேசி முடித்தார். இந்நிலையில் தனது கதாபாத்திரத்துக்கு தானே டப்பிங் பேசுவதாக தீபிகா இப்போது சொல்லியிருக்கிறார். இதனால் இதற்காக கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலையில் தயாரிப்பாளர் தள்ளப்பட்டுள்ளார்.
இதுபற்றி இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறும்போது, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா தமிழ் பெண்ணாக நடித்தார். அப்படத்தில் அவரே டப்பிங் பேசி இருந்தார். அது ரசிகர் களை கவர்ந்தது. இதையடுத்து அவரும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாகி இருக்கிறார். இப்படத்தின் இந்தி பதிப்பை ரிலீஸ் செய்வதற்கு முன்னதாக விஐபிகளுக்கு ஸ்கிரீன் செய்ய உள்ளோம். அதற்காக தீபிகா கதாபாத்திரத்துக்கு மோனா கோஷ் என்பவர் குரல் கொடுத்தார். படம் ரிலீஸ் ஆவதற்குள் தானே டப்பிங் பேசி தர சம்மதித்திருக்கிறார் தீபிகா என்றார்.

No comments: