உதய்கிரண் தற்கொலை நடிகையிடம் விசாரிக்க போலீசார் திட்டம்
இளம் நடிகர் தற்கொலை பற்றி அவருடன் நடித்த தமிழ் நடிகையிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழில் ‘பொய்‘ படத்தில் நடித்தவர் உதய்கிரண். ‘பெண்சிங்கம்‘, ‘சித்திரம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஞாயிறன்று இவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் உதய்கிரணுடன் பேசியது யார், யார் என்ற விவரத்தை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்க உள்ளது. இந்நிலை யில் உதய்கிரணுடன் ஜோடியாக ‘நுவ்வு நேனு என்ற படத்தில் நடித்தவர் அனிதா. இவர் தமிழில் ‘சாமுராய், ‘வருஷமெல்லாம் வசந்தம், சுக்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் அளித்த கண்ணீர் பேட்டி. கடந்த ஒரு வருடமாக உதய்கிரணுடன் எனக்கு நட்பு இருந்தது. எப்போதாவது அவருடன் பேசுவேன். கடந்த 2012ம் ஆண்டு அவர் திருமணம் செய்துகொண்டபிறகு பேசினேன். அவரது மரணம் எனக்கு வருத்தத்தை தந்துள்ளது. சொந்த வாழ்வில் அவர் சந்தோஷமாக இல்லை என்பது எனக்கு தெரியும். அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்த உதய்கிரண் வாழ்வில் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டி இருந்தது. அவரது இழப்பு திரையுலகுக்கு ஏற்பட்ட நஷ்டம்தான். அவருக்கு ஏற்பட்டிருந்த மனஉளைச்சல்தான் அவரை தற்கொலை செய்துகொள்ள தூண்டி உள்ளது என்றார். அனிதாவின் பேட்டி பத்திரிகைகளில் வந்ததையடுத்து அவரிடமும் மற்றும் உதய¢கிரணின் உறவினர்கள், நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

No comments: