Header Ads

மலையாள நடிகருடன் ராட்டினம் சுவாதி ரகசிய டும் டும்

ராட்டினம் பட ஹீரோயின் சுவாதி மலையாள நடிகரை ரகசிய திருமணம் செய்தார். தமிழில் ராட்டினம் படத்தில் அறிமுகமானவர் சுவாதி. இப்படத்தின் ஹீரோ லகுபரன். இருவருக்கும் காதல் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் நடிக்கும் படமொன்றில் லகுபரனுக்காக சிபாரிசு செய்து ஹீரோ வாய்ப்பும் வாங்கித்தந்தார் சுவாதி. இதனால் காதல் கிசுகிசு சூடுபிடித்தது. ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்த சுவாதிக்கு தமிழில் வாய்ப்புகள் குவியவில்லை. இதனால் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று மற்ற மொழிகளில் வாய்ப்புக்காக தூதுவிட்டார். அதுவும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவரது திருமணம் ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறது. மலையாள நடிகர் அஜய் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். தமிழ் நடிகருடன் காதல் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவர் மலையாள நடிகரை ரகசிய திருமணம் செய்திருக்கிறார்.

No comments:

Powered by Blogger.