திருமணத்தில் விருப்பம் இல்லை: நடிகர் சல்மான்கான் பேட்டி
இந்தி நடிகர் சல்மான் கான் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். 48 வயதான அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
எனக்கு திருமணத்திலோ அல்லது பெண் தோழிகளை வைத்து கொள்வதிலோ விருப்பம் கிடையாது. நான் தனிமையில் வாழவே விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டாக தனிமையில் வசித்தே பழகிவிட்டேன். தனிமையை தான் விரும்புகிறேன்.
தனிமையாக வசிப்பதால், செய்ய வேண்டியவற்றை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் செய்ய முடியும். அதை பற்றி விவரித்து கூற வேண்டியதில்லை. நான் யாரிடமும் பொய் பேச வேண்டிய அவசியமும் இல்லை.
யாராவது என் வாழ்வில் குறுக்கிட விரும்பினால் தாராளமாக வரலாம். ஆனால் எதையும் எதிர்பார்க்காதீர்கள். நான் பெண்களை மதிப்பவன். அவர்கள் மீதான மதிப்பை இனியும் தொடருவேன். நான் ஒருமுறை கூட யாரிடமும் பொய் பேசியதே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நாக்பூரில் ஜெய் ஹோ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ரசிகர்களின் தள்ளுமுள்ளு செய்த சம்பவத்துக்கு சல்மான் கான் அதிருப்தி தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ ரசிகர்கள் என்னை தொலைவில் இருந்து ரசிக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.
ஏனென்றால் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு குழந்தைகள் உள்பட பலருக்கும் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற செயல்களில் ரசிகர்கள் மறுபடியும் ஈடுபட்டால், நான் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். உங்களது அன்பு மற்றும் அரவணைப்பை பெரிதும் மதிக்கிறேன். அவற்றை பெருமையாக கருதுகிறேன்’’ என்றார்.

No comments: