கார்த்திகா திருமண ஏற்பாடு திடீர் நிறுத்தம்
திருமணத்துக்கு தயாரான கார்த்திகா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். ‘கோ‘, ‘அன்னக்கொடி‘ ஆகிய படங்களில நடித்தவர் கார்த்திகா. முதல்படம் ஹிட்டாக அமைந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. தமிழில் டீல் என்ற படத்தில் மட்டும் அருண்விஜய்யுடன் நடித்து வந்தார். இதற்கிடையில் அவரது தங்கை துளசி, ‘கடல்‘ படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கோலிவுட் படங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு மலையாள படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் கார்த்திகா. அங்கும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்புகள் குவியவில்லை.
இதையடுத்து கார்த்திகாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தன. இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு‘ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதையடுத்து திருமண எண்ணத்தை கைவிட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் கார்த்திகா. புறம்போக்கு படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்கும் கார்த்திகாவுக்கு டேப் டான்ஸ் நடன காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து டேப் டான்ஸ் கற்க தொடங்கி இருக்கிறார். பெரிய படம் என்பதால் இதற்கு பின் பிசி நடிகை ஆகிவிடலாம் என நம்புகிறார் கார்த்திகா. அதனாலேயே திருமண ஏற்பாட்டை தள்ளிப்போடுமாறு அம்மா ராதாவுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.

No comments: