சீனாவில் இந்திய எண்ணெய் கப்பல் வெடித்து தீப்பிடித்தது: 7 தொழிலாளர்கள் பலி
சீன கடற்பகுதியில் 50 ஆயிரம் டன் எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த இந்திய கப்பல் ஒன்று பழுதடைந்தது. இதையடுத்து அந்த கப்பல் ரிப்பேர் செய்வதற்காக செஜியாங் மாகாணம், சவுஷான் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கப்பலை ரிப்பேர் செய்வதற்கு முன்பாக, இன்று காலை கப்பலில் இருந்த எண்ணெயை இறக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென எண்ணெய் தீப்பிடித்தது. ஊழியர்கள் சுதாரித்து வெளியேறுவதற்குள் டேங்கர் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் பலியாகினர். டேங்கர் வெடித்ததால் எண்ணெய் கசிவு ஏற்பட்டதா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments: