அஜீத் படத்தை இயக்குகிறேனா? விஷ்ணுவர்தன் பதில்
ஆரம்பம் 2 இயக்கப்போவதாக வந்த தகவல் குறித்து விஷ்ணுவர்தன் விளக்கம் அளித்துள்ளார். பில்லா படத்தில் அஜீத்தை இயக்கிய விஷ்ணு வர்தன் அதைத் தொடர்ந்து உருவான பில்லா 2 படத்தை இயக்கவில்லை. இதற்கிடையில் தெலுங்கு படம் இயக்கினார். இதைத் தொடர்ந்து மீண்டும் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தை இயக்கினார். அப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இப்போது மீண்டும் அஜீத் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகவும் இது ஆரம்பம் படத்தின் 2ம் பாகம் என்றும் தகவல் பரவியது. சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க¤ உள்ளார் விஷ்ணுவர்தன். அந்த நிறுவனம் மூலம்தான் ஆரம்பம் 2 உருவாக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இது பற்றி விஷ்ணுவர்தன் கூறியதாவது: விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது நிஜம்தான்.
இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஆர்யா, எனது தம்பி கிருஷ்ணா நடிக்க உள்ளனர். அஜீத்தை வைத்து ஆரம்பம் 2 இயக்கவில்லை. ஆனால் அவருடன் கண்டிப்பாக 3வது முறையாக இணைவேன். அதற்கான சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறேன். எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் நானே படங்களை இயக்குவேன் என சொல்ல முடியாது. திறமையான புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தருவேன். அதே சமயம் வெளிநிறுவன படங்களில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். இவ்வாறு விஷ்ணுவர்தன் கூறினார்.

No comments: