சேத்துப்பட்டில் ஏசு சிலையில் ரத்தம் வடிந்ததாக பரபரப்பு: கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை
சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் ஏசு சிலை உள்ளது. இந்த ஏசு சிலையின் கால், கை மற்றும் கழுத்து பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது.
அதை பார்த்த கன்னியாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுதீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. ஆயிரக்கணக்காண பொதுமக்கள் திரண்டுவந்து பார்த்தனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவசமடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்து சென்றனர்.
இந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ளது.
வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்ததாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர்.
செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துபட்டு சிறிஸ்தவ ஆலய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
No comments: