ரம்மி – திரைவிமர்சனம்
விஜய் சேதுபதி வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து வழங்கி நம் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் அவர் நடிப்பில் புதுமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் ரம்மி.
ரம்மி படத்ததின் ஆட்டம் எப்படின்னு எப்படின்னு பார்ப்போம்,
கதை நடக்கும் காலம் 1987 நடப்பது போல் அமைத்திருக்கிறாா்கள். கதையின் கரு புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டம். வெளியூர்க்காரன் யாராவது வந்து காதல் செய்தால், ஆளையே வெட்டும் கிராமத்தில் இருக்கும் காலேஜிற்கு படிக்க
போகிறார்கள் இனிகோ பிரபாகரும் விஜய் சேதுபதியும். அந்த ஊரில் இருக்கும் இரு பெண்களை அவர்கள் காதலிக்க ஆரம்பிக்க, அதன்பின் என்ன ஆகிறது என்பதே கதை எப்படியும் இந்த பட நீங்க தியேட்டர்ல பார்க்கப் போறதில்லை.
மார்க் கம்மியாக எடுத்ததால் வேறு வழியேயின்றி, ஒரு கிராமத்தில் இருக்கும் காலேஜிற்கு இனிகோ பிரபாகர் படிக்கப்போவதுடன் துவங்குகிறது படம். எந்த படத்திலும் இல்லாத அதிசயமாக ஹீரோயினும் அதே காலேஜிற்கே, அட அதே
கிளாஸிற்கே படிக்க வருகிறார். அதே கிளாஸில் சேரும் சூரியும் இன்னொருத்தரும் இனிகோவிற்கு நண்பர் ஆகிறார்கள்.
அங்கு சேர்ந்த கொஞ்சநாளிலேயே, உள்ளூர் பெண்ணை காதலித்தால் வெட்டுவதை கண்ணால் பார்க்கிறார்கள். வெட்டு, குத்து மனிதர்கள் நிறைந்த திகில் கிராமமாக செம பில்டப்புடன் படம் ஆரம்பிக்கிறது. காலேஜில் இவர்கள் சேர்ந்து இனிகோவிற்கு ஹீரோயின்மேல் காதல் வர, அந்த இன்னொரு ஃப்ரெண்ட்டும் இன்னொரு பெண்ணை லவ் பண்ண ஆரம்பிக்க, சூரி பதறிப்போய்த் திரிய என ஆரம்ப அரைமணி நேரம் அமர்க்களம் தான்.
நாயகியாக காயத்ரி சூரியனை கண்ட தாமரை மலர் போல மலர்ந்த முகத்துடன் இருக்கிறார். அதாவது மல்லிகை மெட்டு புவாக மலரும் போது எப்படி புத்துணர்ச்சியுடன் மலர்ந்த புவாக வருகிறார். அதுமட்டுமல்லாமல் தாவணியில் வரும் வண்ணத்து புச்சியாக படம் முழுவதும் வலம் வருகிறார்.
மற்றொரு ஹீரோயினாக வரும் ஜஸ்வர்யா கோதுமை அழகி கிராமத்து வாசம் கமழும் முகம். கிணற்றில் மஞ்சள் தேய்ச்சுக்குளிக்கும் காட்சியிலும் விஜய் சேதுபதியுடன் கட்டிலில் கொஞ்சும் காட்சியிலும் பிரமிக்க வைக்கிறார். க்ளைமாக்ஸ“ காட்சியில் அப்ளாஸ் வாங்கிறார்.
ஃப்ரெண்டைக் காணோம். ஒரு லெட்டர். மச்சான், வேற வழியில்லை. பொண்ணைக்கூட்டிட்டு ஓடிப்போறோம். நீயும் தப்பிச்சிடுன்னு லெட்டர். அந்த லெட்டரை எங்க வச்சிருக்காரு? ஹீரோயின் ஊருக்கு மத்தில வாடகைக்கு
எடுத்து தப்பிச்ச ரூமுக்குள்ள. அட ஓடிப்போற மூதேவி, வழில ஹீரோ ஊருக்கு போயோ, இல்லே ஏதாவது வழியிலோ ஹீரோ இனிகோக்கு சொல்லக்கூடாதா? சரி, அது போகட்டும். அப்போ வைக்கிறாங்க பாருங்க ஒரு ட்விஸ்ட்டு. அந்த இன்னொரு ப்ரெண்டு லவ் பண்ணது, இழுத்துட்டுப் போனது ஊர் தலைவரின் பெண்ணை-ன்னு!
என்னாங்கடா இது..ஊருக்குள்ள தங்கி இருக்கானுக..தலிவரு பெரிய அப்பாடக்கர்ன்னு தெரியுது..அவரு பொண்ணு தெரியாதா?
அது பரவாயில்லை, லவ் பண்றவன்கிட்ட தன் அப்பன் யார்னு கூட சொல்லாதா? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுன்னு சொல்வாங்களே அதெல்லாம் கிடையாதா? சரி, எப்படியோ தப்பிச்ச ஹீரோ இனிகோ, ஃப்ரெண்ட்டைத் தேடுதாரு. அதுக்குள்ள தலைவர் கோஷ்டி ஃப்ரெண்ட்டை போட்டுத்தள்ளிட்டு, பொண்ணை ஊருக்கு கொண்டுவந்திடுது.
ஒரு ஃப்ரெண்ட்டு ஜோடி கதை முடிஞ்சதா? இப்போ ஹீரோ-ஹீரோயின் ஜோடிக்கு என்னாகுமோன்னு பதறாம ‘ம்..அப்புறம்’ன்னு கேட்கிறோம். அந்த தலைவரு, குடும்ப மானத்தை பஸ்ல ஏத்துன பொண்ணை கொல்ல போறாரு. அந்த பொண்ணு தலைவரை கொன்னுட்டு, ஹீரோ-ஹீரோயினை சேர்த்துவச்சுட்டு, கையில அருவாளோட நடக்க ஆரம்பிக்குது. ’ஏலேய்..அது நம்மளைப்
பார்த்துத்தான் வருதுலே’ன்னு நாம அலறும்போது, படம் முடிஞ்சிடுது.
படத்தை த்ரில்லர் மாதிரி கொண்டு போனது ஏன்னும் புரியலை. கிணத்துல வாளி விழுந்தாக்கூட டெரர் மியூசிக். வில்லேஜ் த்ரில்லரா கொடுக்கணும்ன்னு நினைச்சிருக்காங்க. முதல்பாதியில் திகிலாவே ஃபீல் பண்றோம். அதெல்லாம் சரி..விஜய் சேதுபதியை எங்கய்யான்னு கேட்கிறீங்களா? மேலே ‘இன்னொரு ஃப்ரெண்ட்டு’ன்னு ஒரு துணை நடிகரைப் பத்தி படிச்சீங்க இல்லியா? அவர் தான் விஜய் சேதுபதி…ஆ…….-வா?
ம்..அதே ஃபீலிங் தான் இங்கயும். ஓரமா வர்றாரு, ஓரமா லவ் பண்றாரு, பொசுக்குன்னு செத்துப்போறாரு. ஆமா பாஸ், இது
இனிகோ பிரபாகர் படம் பாஸ்!
ரம்மி எம். சசிகுமார் பார்முலாவில் வில்லேஜ் லவ் த்ரில்லர் மீடியமா ஹிட் ஆகிடும்.
No comments: