இசைப்பிரியாவின் சித்திரவதையால் அதிர்ந்து போன பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர்
லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவையினர் (BTF) எதிர்கட்சி தலைவர் எட் மிலபானை சந்தித்து பேசியுள்ளார்கள். ஜெனிவாவில் நடக்கவுள்ள மனித உரிமை மாநாட்டில் பிரித்தானியா என்ன செய்யவிருக்கிறது ? அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை ஏன் கடுமையாக இருக்கவில்லை என்பது போன்ற விடையங்களை அவர்கள் இன்று அலசி ஆராய்ந்துள்ளார்கள்.
பிரித்தானியா ஜெனீவா மாநாட்டை பயன்படுத்தி இலங்கை மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்கவேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது, ஈழத்தில் நில ஆக்கிரமிப்பு நடப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இசைப் பிரியாவுக்கு நடந்த கொடுமைகளையும் காண்பித்துள்ளார்கள்.
சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக பல ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இசைப்பிரியா தொடர்பாக சனல் 4 வெளியிட்ட வீடியோவை இதுவரை பிரித்தானிய எதிர்கட்சி தலைவர் பார்க்கவில்லை. இலங்கை இராணுவத்தினர் இசைப்பிரியாவை உயிருடன் பிடித்தமை, பின்னர் அவரை இழுத்துச் செல்வது அடங்கிய, வீடியோக் காட்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் ஒருவர் எட் மிலபானுக்கு போட்டுக் காட்டியுள்ளார். இதனை எதிர்கட்சி தலைவர் பார்த்து , அதிர்ந்து போனதாக, உள்ளக தகவல்கள் சில மேலும் தெரிவிக்கின்றன.
No comments: