நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட சிம்பு
நயன்தாராவை சிம்பு திருமணம் செய்து கொண்ட தகவல் உண்மையே. இது சூடான தகவல் அல்ல ஆனால் சுவையானது. பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவும் நயன்தாராவும் எட்டு வருடங்களுக்கு பின் இணைந்து நடித்து வருகிறார்கள். இதில் திருமண காட்சி இடம் பெற உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இருவருக்கும் திருமணம் நடந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா தாலி கட்டி நெற்றியில் குங்குமம் வைத்து இருக்கிறார்.
ஏற்கனவே 'ராஜா ராணி' படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டது. அதை போஸ்டராக அச்சிட்டு வெளியிட்டும் படத்துக்கு விளம்பரம் தேடினர்.
அது போல் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் காட்சி வைத்திருக்கிறார்கள். சிம்புவும், நயன்தாராவும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது போல் காட்சியை எடுத்திருக்கிறார்கள். சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அடுத்து நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. திருமணம் வரை வந்தார்கள். கடைசியில் இதுவும் முறிந்து போனது.
தற்போது இந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ள இருவரையும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்தின் தற்போதைய காட்சி ரசிகர்கள் மத்தியில் மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.
No comments: