என் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவுக்கு போகுது : ராகிணி திவிவேதி
ஜெயம் ரவி, அமலா பால் நடிக்கும், நிமிர்ந்து நில் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார் கன்னட நடிகை ராகிணி திவிவேதி. இந்தப் படம் மூலம் தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை.
ஆமா. இந்தப் படத்துக்காக அழைப்பு வந்ததும் டைரக்டர் சமுத்திரக்கனிகிட்ட கதை கூட கேட்கலை. ஒன்லைன்தான் கேட்டேன். என்னை நடிக்க அழைச்சிருக்காங்கன்னா, கண்டிப்பா நல்ல ரோல் இருக்கும்னு நம்பினேன். ஏன்னா, அவர் சிறந்த இயக்குநர். நான் நம்பின மாதிரியே சிறப்பான கேரக்டர் அமைஞ்சிருக்கு. இதுல ஜெயம் ரவி இரண்டு வேடம் பண்றார். ஒரு கேரக்டருக்கு நான் ஜோடி. நிமிர்ந்து நில் டீம்ல நானும் இருந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த ஷூட்டிங்கல ஜாலியான அனுபவம் கிடைச்சது... என்கிறார் ராகிணி.
கிராமத்து பெண்ணாமே?
அப்படியில்லை. சிறுநகரத்துல வசிக்கிற பெண். போல்டான கதாபாத்திரம். மனசுல என்ன நினைக்கிறேனோ அதை ஓபனா பேசுற, தடாலடி கேரக்டர். படம் முழுதும் சேலை கட்டி நடிச்சிருக்கேன். இந்தப் படம் தெலுங்குல ஜன்டாபாய் கபிராஜூங்கற பேர்ல வெளியாகுது. அதுல நானி ஜோடியா நடிச்சிருக்கேன். ஒரே நேரத்துல இரண்டு ஹீரோ கூட மாறி மாறி நடிச்சது வித்தியாசமா இருந்தது. இந்தப் படம் பெர்லின் பட விழாவுக்கு போறது எனக்கு உற்சாகமா இருக்கு. என்னோட முதல் தமிழ்ப் படத்துக்கே இப்படியொரு கவுரவம் கிடைச்சிருக்கிறது எனக்கு பெருமையான விஷயம்தான்.
குத்துப்பாட்டுக்கு கிளாமரா ஆடியிருக்கீங்களாமே?
குத்துப்பாட்டு ஓ.கே. ஆனா, கிளாமர் பாடல் இல்லை. காரைக்குடியில ஷூட்டிங் நடந்தது. ஜெயம் ரவி சிறப்பா, ஸ்டைலா டான்ஸ் ஆடினார். அவரோட ஆடுறதுக்கு எனக்குத்தான் கொஞ்சம் படபடப்பா இருந்தது. படத்தோட ஹைலைட்டான விஷயங்கள்ல அந்தப் பாடல் காட்சியும் ஒன்று. படம் வந்தப் பிறகு எனக்கு நிறைய பாராட்டு கிடைக்கும்.
பிரபுதேவாவோட ஆர்...ராஜ்குமார்ல டான்ஸ் ஆடினீங்களே?
அது எதிர்பாராத ஷாக். திடீர்னு பிரபுதேவா கேட்டப்போ, மறுக்க முடியுமா சொல்லுங்க? அவர் சிறந்த டான்சர்னு எல்லோருக்குமே தெரியும். அவரே கூப்பிடறார்னதும் பயந்துகிட்டே சம்மதிச்சேன். ஏற்கனவே நான் நடிச்ச படங்களைப் பார்த்துதான் அவர் கூப்பிட்டிருக்கணும்னு நினைக்கிறேன். அவர் என்ன சொன்னாரோ அதைக் கத்துக்கிட்டு வேகமா டான்ஸ் பண்ணினேன். அந்தப் பாட்டு பெரிய ஹிட். நிறைய பாராட்டு கிடைச்சது. அதைத் தொடர்ந்து இன்னும் சில இந்தி பட வாய்ப்புகள் வந்தது. ஹீரோயினா நடிக்கப் பேசிட்டு இருக்கிறேன்.
நீங்க போலீஸ் அதிகாரியா நடிச்ச கன்னட படம் என்னாச்சு?
படம் பேரு ராகிணி ஐபிஎஸ். என்னோட பெயர்லயே ஒரு படம். போலீஸ் அதிகாரி வேடம். நிறைய நடிகைகள் போலீஸ் அதிகாரியா நடிச்சிருக்காங்க. எனக்கு இது சிறப்பான படம். ஆக்ஷன் காட்சிகள்ல ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கேன். இந்த மாதம் ரிலீஸ் ஆயிடும்னு நினைக்கிறேன். அப்புறமா, தமிழ், தெலுங்குல டப் பண்ற ஐடியாவும் இருக்கு.
கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு அப்புறம் இந்தி..?
தென்னிந்திய மொழிகள் அனைத்துலயும் நடிக்கிறது மகிழ்ச்சியாதான் இருக்கு. இந்தியிலயும் ஹிட்டானா நல்ல விஷயம்தான். தென்னிந்தியாவுல இருந்து அங்க போய் நிரந்தரமா இடம்பிடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அதுமட்டுமில்லாம, நடிப்புக்கு மொழி ஒரு பிரச்னை இல்லையே. எங்க நடிக்கிறோம்ங்கறதும் முக்கியமில்லை. நடிச்சுக்கிட்டே இருக்கணும். சிறந்த நடிகைன்னு பெயர் வாங்கணும். அதுதான் நோக்கம்.
ஒவ்வொரு மொழியிலயும் என்ன வித்தியாசம் தெரியுது உங்களுக்கு?
மொழியைத் தவிர, வேற எந்த வித்தியாசமும் எனக்கு தெரியலை. எல்லாருமே தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைக்கிறாங்க. சரியான நேரத்துக்கு வந்திடறாங்க. நினைச்ச மாதிரி ஷூட் பண்றாங்க. எல்லா மொழியிலயும் வேலை ஒரே மாதிரிதான் இருக்கு. வேற ஏதும் வித்தியாசமா எனக்கு தெரியலை. இப்ப கன்னடம், மலையாளத்துக்குப் பிறகு தமிழ்க் கற்கிறேன். இன்னும் ரெண்டு படங்கள்ல நடிச்சேன்னா, தெளிவா தமிழ்ப்
பேசிடுவேன்.
கிளாமர்?
சினிமாவே கிளாமர்தான். எனக்கு அதுல கட்டுப்பாடு ஏதும் இல்லை. கதைக்கு தேவைன்னா பண்ணலாம். ஆனா, ரொம்ப வல்கர் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்
No comments: