Header Ads

மோகன்லாலின் செல்வாக்கை சீர்குலைத்த ஜில்லா. கேரளாவிலும் நெகட்டிவ் ரிசல்ட்

நேற்று உலகம் முழுவதும் ரிலீசான ஜில்லா கேரளாவில் வெகு அமர்க்களமாக ரிலீஸ் ஆனது. படத்தின் கேரள உரிமையை வாங்கியிருந்த மோகன்லால், சொந்தமாக சுமார் 200 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார். விஜய் படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு பொதுவாக கிடைக்கும். அதேபோல சமீபத்தில் ரிலீஸான மோகன்லாலில் த்ரிஷம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மோகன்லால் இமேஜ் கேரளாவில் மிக அதிகமாக கூடியிருந்தது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன ஜில்லா கேரள ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் கிடைத்ததாக கூறப்படுகிறது.


நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களை பார்த்து பழகிவிட்ட கேரள ரசிகர்கள் இப்படி ஒரு அரதப்பழசான கதையை பார்த்து பெரும் ஏமாற்றம் அடைந்தனர். லாஜிக்கே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் பல காட்சிகளை தியேட்டரிலேயே கேலி செய்ததை பார்க்க முடிந்தது.

சம்பளத்திற்கு பதிலாக கேரள உரிமையை வாங்கியிருந்த மோகன்லால் பெரும் ஏமாற்றம் அடைந்தார் என்பதுதான் உண்மை. ஆனாலும் வரிசையாக பொங்கல் விடுமுறை இருப்பதாலும் , வேறு படங்கள் ரிலீஸ் ஆகாததாலும் ஓரளவிற்கு வசூல் வரும் என மோகன்லால் எதிர்பார்க்கிறார். ஆனாலும் முதல் நாளிலேயே படம் வெகுசுமார்தான் என்ற கருத்து கேரளா முழுவதும் பரவிவிட்டது என்பதால் மோகன்லால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காது என்கிறனர் விநியோகிஸ்தர்கள்

ஏற்கனவே மணிரத்னத்தின் ;'இருவர்' படத்தை மோகன்லால் தனது சம்பளத்திற்கு பதிலாக உரிமையை வாங்கி வெளியிட்டார். அந்த படம் மோகன்லாலுக்கு பலத்த நஷ்டத்தினை கொடுத்தது. ஜில்லா படத்தால் மோகன்லாலுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் கண்டிப்பாக லாபம் கிடைக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிந்துவிட்டதால் மோகன்லால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.

A.V Pooja, Anand, D. Imman, Deepak, K.G. Ranjith, S.P.Balasubramaniam, Santhosh Hariharan, Shankar Mahadevan, Shenbagaraj, Shreya Ghoshal, Snigdha Chandra, Sunidhi Chauhan, Vijay ,Jilla, Jilla, Tamil movie Jilla, Tamil movie Jilla, Jilla review, Jilla review,Jilla Movie review,Jilla movie online review,Jilla ,Jilla  movie,Jilla  mobie online,Jilla  tamil movie,Jilla movie online ,jilla Jilla ,Jilla  movie online ,Jilla  tamil movie on line,ஜில்லா திரை விமர்சனம்

No comments:

Powered by Blogger.