Header Ads

சிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த பாட்டி

ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு லட்சியம் இருக்கும். கலெக்டராகணும், ஹீரோவாகணும், போலீஸ் அதிகாரி ஆகணும், நடிகனாகணும்னு ஏகப்பட்டது இருக்கும். ஆனா, விரட்டி விரட்டி காதலிக்கிறதை மட்டுமே லட்சியமா கொண்ட ஒருத்தனை மையப் படுத்திய கதைதான், மான் கராத்தே என்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் டாக்கி போஷன் முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில் அவரிடம் பேசினோம்.


இது காமெடிப் படமா? காதல் படமா?
காதல், காமெடி, சென்டிமென்ட் எல்லாமே படத்துல இருக்கும். தன்னோட எல்லைக்கு மீறிய ஒரு பெண்ணை பார்க்கிறதுல இருந்து, விரட்டி விரட்டி காதலிக்க வைக்கிறது வரையான கதைதான் படம். தன்னோட காதலுக்காக எந்த எல்லைக்கும் போகிற ஹீரோ பண்ற அலப்பறைகள்தான் திரைக்கதை. மேலோட்டமா இப்படிச் சொல்லிட்டாலும் குட்டி குட்டி சர்ப்பிரைஸ் படத்துல நிறைய இருக்கும். டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் கதைங்கறதால அவரோட டச் அதிகம். 

இந்தப் படத்துல மாடர்னா தெரியறீங்களே?
இதுக்கு முன்னால கிராமம் அல்லது சிறு டவுன் பின்னணியில அமைஞ்ச கதையிலதான் நடிச்சிருக்கேன். எதிர்நீச்சல் சிட்டி கதைன்னாலும் அதுல ரெகுலரான பையனா வந்திருப்பேன். அதை விட இது பக்காவான நகரத்து கதையா இருக்கும். அப்படியொரு மாடர்ன் பையனா என்னை மாற்ற டைரக்டர் திருக்குமரன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார். எது எது எனக்கு செட்டாகும்னு நிறைய மெனக்கெட்டு, மீசையை எடுத்து டோட்டல் லுக்கையே மாற்றி நடிக்க வச்சிருக்கார். எனக்கே என்னைப் பார்க்கப் புதுசா இருக்கு.

ஹன்சிகாவோட நடிச்சது பற்றி?
ஹன்சிகா ஜாலி டைப். கதை சொல்லும்போதே ஹன்சிகா மாதிரி ஒரு பொண்ணுன்னுதான் சொல்லிட்டிருந்தாங்க. திடீர்னு பார்த்தா அவங்களே நடிக்க வந்துட்டாங்க. அவங்களுக்கு ஸ்ட்ராங்கான கேரக்டர். அதாவது, எல்லா விளையாட்டு மேலயும் ஆர்வம் உள்ள, ஆனா, எதையும் விளையாட தெரியாத கேரக்டர் அவங்களுக்கு. என்னை விட குறைஞ்ச வயசுன்னாலும் இன்டஸ்ட்ரியில எனக்கு சீனியர் அப்படிங்கறதால, ஜி ஜின்னுதான் அவங்களை கூப்பிடுவேன். ஏன் ஜி?ன்னு கேட்பாங்க. நீங்க சீனியர்ன்னு சொல்லுவேன். அட போப்பான்னு ஜாலியாயிடுவாங்க. ஏழு மணிக்கு ஷூட்டிங்குன்னா, இங்க இருக்கிற டிராபிக்ல நாம போய் சேர்றதே எட்டு மணியாதான் இருக்கும். ஆனா, அவங்க ஆறரை மணிக்கு வந்து நிற்கிறது ஆச்சரியமான விஷயம்தான்.

2013-ல நீங்க நடிச்ச கேடி பில்லா வும் வருத்தப்படாத வாலிபர் சங்கமும் பெரிய ஹிட்? எதிர்பார்த்தீங்களா?
ஹிட் வேணும்னுதான் இன்டஸ்ட்ரியில எல்லோருமே போராடிட்டு இருக்காங்க. நானும் ஹிட்டாகும்னுதான் எதிர்பார்த்தேன். இவ்வளவு பெரிய ஹிட்டை எதிர்பார்க்கலை. இன்னைக்கும், ஊதா கலரு ரிப்பன்... எங்கயாவது ஒலிச்சிட்டுதான் இருக்கு. படங்கள், வரும் போகும். ஆனா, பாடல்கள் இன்னும் இன்னும் நம்மை காண்பிச்சிட்டிருக்கிறது பெரிய விஷயம். புதுச்சேரியில, மான் கராத்தே ஷூட்டிங். வேடிக்கைப் பார்த்துக் கிட்டிருந்த ஒரு பாட்டி, ஊதா கலரு ரிப்பன்ல கலர் கலர் பனியனா போட்டு ஆடுன பையன்தான நீன்னு கேட்டாங்க. எனக்கு ஆச்சரியம். ஒரு பாடல் அவங்க அளவு ரீச்சாகுறது சாதாரணமில்லை. அதுக்காக, இமானுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

குழந்தைகள்ல இருந்து பெரியவங்கவரை எல்லோருக்கும் பிடிச்ச ஹீரோவாகிட்டீங்களே?
ஏற்கனவே சேனல்ல இருந்து வந்ததும் ஒரு காரணமா இருக்கலாம். என் படங்கள்ல, பெண்களை முகம் சுழிக்க வைக்கிற மாதிரி காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், வல்கரான காட்சிகள் எதுவும் வந்திடக்கூடாதுன்னு கவனமா இருக்கிறேன். என் படங்கள்ல அப்படி ஏதும் இல்லாததும் எல்லாருக்கும் பிடிக்கக் காரணமா இருக்கலாம்.

புத்தாண்டு தீர்மானம் ஏதாவது?
போன வருஷம் தனுஷ், அவர் போகுற ஜிம்முல என்னை சேர்த்துவிட்டார். சிக்ஸ்பேக்குக்காகன்னு நினைச்சிடாதீங்க. ஆர்ட்டிஸ்ட் ஆயிட்டோமில்லையா? உடம்பை ஃபிட்டா வச்சிருக்கறதுக்காகத்தான். தொடர்ந்து போயிட்டிருக்கேன். இந்த வருஷமும் அதை கன்டினியூ பண்ணணும். அவ்வளவுதான்.

No comments:

Powered by Blogger.