நடிகையை மிரட்டிய நடிகரின் தாய்!
நயன நடிகையும், ஆர்யமான நடிகரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் அடிபட்டன. இந்த செய்தியை இருவரும் மறுத்தனர்.
இந்நிலையில், ஆர்யமான நடிகருக்கு வயதாகிக் கொண்டே போவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அவருக்கு பெண் தேடி போகும் இடமெல்லாம் பெண் வீட்டார் நடிகரின் காதல் லீலைகளை பற்றி கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு அவரது அம்மாவை பெரும் பிரச்சினைக்கு ஆளாக்குகிறார்களாம்.
இதனால், நயன நடிகையை தன்னுடைய வீட்டுக்கு தனியாக வரவழைத்த நடிகரின் தாய் இனிமேல் என் மகனுடன் சுற்றினால் உன்னை தொலைத்துவிடுவேன் என எச்சரித்து அனுப்பினாராம். ஆனால், நடிகையோ எதையும் கண்டுகொள்ளாததுபோல் நடிகருடனான தொடர்பை தொடர்ந்து வருகிறாராம்.

No comments: