Header Ads

புத்தாண்டு தினத்தில் பிரான்சில் 1067 கார்கள் எரிப்பு

.தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது வீட்டில் உபயோகப்படுத்திய பழைய பொருட்கள் தீயிட்டு அழிக்கப்படுகின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பாரம்பரியமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதுபோன்று, பிரான்ஸ் நாட்டில் ஆங்கில புத்தாண்டுக்கு முதல்நாள் அதாவது டிசம்பர் 31–ந்தேதி இரவில் பழைய கார்களை எரித்து அழிக்கும் சம்பவம் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1–ந்தேதி அன்று 1067 கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன. பிரான்ஸ் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவாகும். கடந்த ஆண்டு 1,193 கார்கள் எரிக்கப்பட்டன. இந்த தகவலை பிரான்ஸ் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. எனவே பாதுகாப்பு பணியில் 53 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். புத்தாண்டு அன்று நடந்த வன்முறை சம்பவங்களில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர்.

No comments:

Powered by Blogger.