Header Ads

டான்ஸ் மாஸ்டருடன் ஊர் சுற்றும் வனிதா விஜயகுமார்! : விரைவில் திருமணம் செய்யப்போவதாக அறிவிப்பு

திருமணம் செய்து கொண்ட நடிகைகள் அதே வேகத்தில் டைவர்ஸும் வாங்குவது என்பது ஒன்றும் இந்த சமூகத்துக்கு புதிதல்ல. ஆனால் அப்படி டைவர்ஸ் வாங்கிய உடனே அடுத்ததாக ஒருவருடன் ஜோடி போட்டு ஊர் சுற்றுவது என்பது தான் இந்தச் சமூகம் ஆச்சரியமாக பார்க்கும் சமாச்சாரமாக உள்ளது.

நடிகையும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா விஜயகுமார் எப்போதுமே பத்திரிகைகளுக்கு பரபரப்பு செய்திகளை தரத் தவறுவதே இல்லை. ஏற்கனவே தனது திருமணச் செய்தி, அப்புறம் குடும்பச் சண்டை என்று பரபரப்புகளை கிளப்பியவர் தான். இப்போது புதிதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் ரகசியக் குடித்தனம் நடத்துவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ‘என்னமோ ஏதோ’ படத்தின் ஆடியோ பங்ஷனில் ராபர்ட்டுடன் நெருக்கமாக ஜோடி போட்டு வந்தார் வனிதா. இதை நேரில் பார்த்த ஊடகங்கள் பலவும் நேற்று அவரைப்பற்றி தாறுமாறாக எழுதித்தள்ளின.

இதையடுத்து அவசரம் அவசரமாக தனது சார்பில் ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டார் வனிதா விஜயகுமார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

“ நானும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. ஆனால் எங்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இந்த விஷயம் எங்கள் இரண்டு பேருடைய குடும்பத்துக்கும் நன்றாகவேத் தெரியும். இதனால் அவர்களும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளார்கள்.

இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து விரைவில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளோம். அதுமட்டுமில்லாமல் விரைவிலேயே நாங்கள் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளோம், ஆனால் அது முறைப்படி நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

இப்படிச் சொல்லும் வனிதா விஜயகுமாருக்கு இது ஒன்றும் முதல் திருமணமல்ல. ஏற்கனவே நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஸ்ரீஹரி என்ற மகனைப் பெற்றார். பிறகு இரண்டாவதாக ஆனந்த்ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டு ஜெனிதா என்ற குழந்தையை பெற்றெடுத்தார்.

இப்போது ராபர்ட்டை அவர் மூன்றாவதாக திருமணம் செய்யத் தயாராகி வருகிறார். ராபர்ட் பிரபல கவர்ச்சி நடிகையான அல்போன்சாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.