Header Ads

ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் விஷாலா?

ஆம் ஆத்மி என்ற கட்சிதொடங்கிய ஒரே ஆண்டில் வியத்தகு வெற்றி பெற்று, இந்தியத் தலைநகர்  டெல்லியில் ஆட்சி அமைத்து மொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து விட்டது.

அதோடு, 40 ஆண்டுகால அரசியல் கட்சிகளுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில்சமந்தா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் அக்கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில்நடிகர் விஷால்அந்த கட்சியின் தமிழக தலைவராகப் போவதாக ஒரு செய்தி பரபரப்பை கூட்டியது.

அதிலும் இதுவரை அரசியல் பற்றி ஒரு கருத்துகூட சொல்லாத விஷாலுக்குள்ளும் ஒரு அரசியல்வாதி இருந்து கொண்டிருந்தாராஎன்று பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றனர்.

ஆனால்இநத செய்தி விஷாலின் காதுக்கு சென்றபோதுஅவருக்கு ஒன்றுமே புரியவில்லையாம். அது என்ன ஆம் அத்மிஎனக்கு ஒன்னுமே புரியலையே என்றாராம். அப்போதுதான் நீங்க பேப்பரே படிக்கிறது இல்லையா என்று சொல்ல ஆரமபித்தவர்கள் அக்கட்சியின் டில்லி வரலாறை சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள்.

அதன்பிறகுதான்அப்படியா சங்கதி. நானே இப்பத்தான் அந்த கட்சியை பத்தி கேள்விப்படுறேன். அதற்குள் நான் அக்கட்சியின் தமிழக தலைவராகப்போறதா யாரு பரப்பி விட்டாங்கஒன்னுமே புரியலையே சாமி. என்று மண்டையை சொறிந்தாராம் விஷால்.

சரி எப்படியோ செய்தி பரவிப்போச்சு. கட்சிப்பணி வா வா என்கிறது. உங்க அபிப்ராயம் என்னஎன்று கேட்டபோதுஎன் படத்துல அரசியல் இருந்தாகூட எனக்கு அது பிடிக்காது. அந்த அளவுக்கு அரசியல்ல ஈடுபாடே இல்லாதவன் நான். நானாவது அரசியலுக்கு வர்றதாவது. அட போங்கண்ணே ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்க என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாராம் விஷால்.

No comments:

Powered by Blogger.