Header Ads

காஞ்சனாவாக பாலிவுட் செல்லும் சரத்குமார்!

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் சரத்குமார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா (முனி 2) படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

இதில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். காஞ்சனாவில் உண்மையான ஹீரோ என்றால் அது அதிரடி வேடத்தில் வரும் சரத்குமாரின் திருநங்கை கேரக்டர்தான்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த வேடத்தில் சரத்குமார் நடித்த விதம். பாலிவுட்டில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் நடிக்க யாருமே முன்வரவில்லையாம்.

எனவே இந்த கேரக்டரில் தமிழில் நடித்த சரத்குமாரையே நடிக்க வைக்க லாரன்ஸ் பேசி வருகிறார்.

இந்தி ரீமேக்கை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான துஷார் கபூர் மற்றும் சபினா கான் ஆகிய இருவரும் கூட்டாக தயாரிக்கின்றனர்.

ராகவா லாரன்ஸ் தற்போது "கங்கா முனி 3" என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கைத் தொடங்கவுள்ளார்.

No comments:

Powered by Blogger.