மருதானையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை
மருதானையில் லொட்ஜ் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியை முற்றுகையிட்ட மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் அங்கிருந்த ஆறு பெண்கள் உட்பட எட்டு பேரைக் கைது செய்துள்ளனர். குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று செவ்வாய்க்கிழமை proஇவ் விபசார விடுதியை முற்றுகையிட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. விடுதிக்கு பொறுப்பான இருவருடன் விபசாரத்தில் ஈடுபட்ட ஆறு பெண்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் பன்வில, வெள்ளவத்தை , மோதரை , வவுனியா , தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிய வருகின்றது. விசாரணையின் நிறைவில் சந்தேக நபர்களை மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
No comments: