முதல் இடத்தைப் பிடித்த ‘ஜில்லா’
ஜில்லா' படத்தின் டிரெய்லர் நேற்றிரவு வெளியிடப்பட்டு டுவிட்டர் தளத்தில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்ம் 'ஜில்லா' படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று டிரெய்லரை வெளியிடாமல், சிறு சிறு டீஸர்களாக வெளியிட்டனர்.
படத்தின் முதல் டீஸர் வெளியிடப்பட்டு யூடியுபில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். தொடர்ச்சியாக 2வது, 3வது டீஸரும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் 8ம் திகதி இரவு வெளியானவுடன் விஜய் ரசிகர்கள் அனைவருமே சமூக வலைத்தளங்களில் லிங்க்கை ஷேர் செய்திருந்தார்கள்.
இதனால், இரவு முதலே டுவிட்டர் தளத்தில் மோகன்லாலை விஜய் இமிடேட் செய்யும் காட்சி, விஜய்யின் கொமடி காட்சிகள், சூரியின் வசனம் என அனைவருமே 'ஜில்லா' படத்தைப் பற்றி பேசியதால் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #Jilla என்ற டேக் முதலிடத்தை பிடித்தது.
தற்போது இந்திய அளவில் முதல் ஐந்து இடத்திற்குள் #Jilla டேக் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments: