Header Ads

முயலை தோற்கடித்த ஆமை.... சீனாவில் அரங்கேறிய சுவாரஸ்யம்!....

சீனாவில் நடந்த போட்டியில் முயலை வென்று ஆமை முதலிடம் பிடித்துள்ளது. சீனாவில் சமீபகாலமாக பனிச்சறுக்கு விளையாட்டுகள் பிரபலமடைந்து வருகின்றது.

இந்நிலையில் ஹீனன் மாகாணத்தில் செல்லப் பிராணிகளுக்கான பனிச்சறுக்கு மற்றும் சக்கரமில்லா வண்டி(ஸ்லெட்ஜ்) ஓட்டும் போட்டிகள் நடந்தது.

இதில் பூனை- நாய்கள் ஒரு அணியாகவும், சேவல்- வாத்துகள் மற்றொரு அணியிலும் போட்டியில் பங்கேற்றன. இந்தப் போட்டிகளில் 40 பேர் தங்கள் செல்லப் பிராணிகளுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதில் மிகவும் சுவாரசியமாக முயலுடன் போட்டியிட்ட ஆமை வெற்றி பெற்றது.

குளிர்காலத்தில் தூங்கும் தன்மையைப் பெற்ற, ஆமை அதன் உரிமையாளரின் தூண்டுதலால் முதலிடத்தை பெற்றுள்ளது.

No comments:

Powered by Blogger.