
காலியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில், ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் பெண் ஒருவரை கத்தி முனையில் ஒருவர் கற்பழித்துள்ளார். இச் சம்பவம் கடந்த 3ம் திகதி நள்ளிரவு இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. 34 வயதான பிரித்தானிய ஆசிரியை, 2 பேருடன் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். 3ம் திகதி காலை அவர்கள் இருவரும் கதிர்காமம் கோவிலுக்கு சென்ற நிலையில், அன்றைய தினம் இரவு பிரித்தானியப் பெண் தனியாக இருந்துள்ளார். ஜன்னலை பிரித்து சத்தம்போடாமல் உள்ளே வந்த நபர் ஒருவர், கத்தியைக் காட்டி, அப்பெண்ணை கற்பழித்துள்ளார். பின்னர் அங்கே இருந்த 95,000 ரூபா பணத்தையும், மற்றும் கம்பியூட்டர் உபகரணங்கள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக குறித்த பெண் பொலிசாரிடம் புகார் கூறியுள்ளார்.
ஆனால் இதுதொடர்பாக சிங்கள மீடியாக்கள் இதுவரை வாயே திறக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இன் நபர் சிங்களவராக இருக்கலாம் என்றும் அவர் நிச்சயமாக அவ்விடத்தை சார்ந்த நபராக தான் இருக்கவேண்டும் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். காரணம் என்னவெனில் பிரித்தானியப் பெண்ணோடு தங்கியிருந்த இரண்டு பெண்களும் கதிர்காமம் செல்வதும், மேலும் ரொக்கமாக பணம் வீட்டில் இருப்பதும் இன் நபருக்கு தெரிந்துள்ளது. எனவே இவர் சிலவேளை அந்த 2 சிங்களப் பெண்களுக்கு தெரிந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக கொழும்பில் இருக்கும் லங்காவூட்ஸ் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: