தற்கொலையில் மர்மம்: உதய்கிரண் மனைவியிடம் போலீசார் விசாரணை
நடிகர் உதய்கிரண் தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது. தற்கொலைக்கான காரணங்களை அறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உதய்கிரண் தற்கொலைக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததே காரணம் என கூறப்பட்டது. தாயார் மரணம் அடைந்தது, தந்தை இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டது போன்றவற்றினாலும் அவர் மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் செய்திகள் பரவின.
ஆனால் உதய்கிரண் தற்கொலையில் மேலும் பல மர்மங்கள் புதைந்து கிடப்பதாக நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். உதய்கிரண் குடியிருந்த வீட்டின் காவலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உதய்க்கும் அவரது மனைவி விசிதாவுக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்றும் குடும்ப வாழ்க்கையில் இருவரும் சந்தோஷமாக இல்லை என்றும் திடுகிடும் தகவலை கூறினார். இதனால் போலீஸ் பார்வை விசிதா பக்கம் திரும்பி உள்ளது.
உதய் கிரணுக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகளுக்கும்தான் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரம் அது ரத்தானது. அதன் பிறகு விசிதாவை மணந்தார். இவர் பேஸ்புக் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கிறார். தற்கொலை செய்வதற்கு முன் சென்னையில் உள்ள நண்பர் பூபாலுக்குதான் உதய்கிரண் போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்க வில்லை. வேறு யாரிடமும் அவர் பேசவில்லை. தற்கொலை செய்த அன்று இரவு உதய்கிரண் மனைவி விசிதா இரவு விருந்துக்கு சென்றுள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கணவனை வீட்டில் இருக்க வைத்து விட்டு இவர் மட்டும் விருந்துக்கு தனியாக போனது ஏன் என்று விசாரிக்கின்றனர். விசிதாவுடன் பணியாற்றும் சக ஊழியர் ரோஹித் என்பவர் பிறந்த நாள் விருந்தில் பங்கேற்க சென்றதாக விசிதா கூறியுள்ளார். கணவனையும் ஏன் உடன் அழைத்து செல்லவில்லை. நள்ளிரவு வரை நடந்த அந்த விருந்தில் பங்கேற்றவர்கள் யார் யார் போன்ற விவரங்களையயும் போலீசார் சேகரிக்கின்றனர்.
சில தினங்களில் இந்த வழக்கில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் வெளியாகும் என்கின்றனர். உதய்கிரண் உடலுக்கு நேற்று இறுதி சடங்குகள் நடந்தது. மாநில சினிமாத்துறை மந்திரி அருணா அஞ்சலி செலுத்தினார்.
No comments: