மகள்களுடன் நீச்சல் உடை அணிந்து புத்தாண்டு கொண்டாடிய ஸ்ரீதேவி
பிகினி உடை அணிந்து குடும்பத்துடன் வெளிநாட் டில் புத்தாண்டு கொண்டாடினார் நடிகை ஸ்ரீதேவி. நீச்சல் உடையில் அவரும், மகள்களும் இருக்கும் போட்டோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பங்களாவில் கணவர் போனிகபூருடன் வசித்து வருகிறார் ஸ்ரீதேவி. அவருடன் மகள்கள் ஜான்வி, குஷியும் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் ஸ்ரீதேவி பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். தீ விபத்தால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதேவியும் அவரது மகள்களும் டென்ஷனாகவே இருந்தனர்.
அவர்களை ரிலாக்ஸ் ஆக்கும் வகையிலும், புத்தாண்டை கொண் டாடும் வகையிலும் கணவர் போனிகபூர் வெளிநாடுக்கு அழைத்து சென்றார். கடற்கரை பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர்கள் படகு சவாரி செய்தனர். பிறகு ஸ்ரீதேவியும் மகள்களும் நீச்சல் உடை அணிந்து கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர். இவர்கள் நீச்சல் உடையுடன் இருக்கும் காட்சி இணையதளத்தில் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
No comments: