கடும் மூடுபனியில் லுங்கி, சட்டையுடன் நடனமாடிய ஹன்சிகா
சிவகார்த்திகேயனும், நடிகை ஹன்சிகா மோத்வானியும் அங்கு இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானிலை தெளிவாக இல்லாத காரணத்தால் சண்டிகருக்கு வரும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் மூடுபனியால் எதிரில் இருப்பவற்றையே பார்க்கமுடியாத நிலை அங்கு நிலவுகின்றது. சண்டிகரிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே உள்ளது.
ஆனால் இந்தத் திரைப்படக்குழுவோ சண்டிகரிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் குறைந்த அளவில் வீடுகளைக் கொண்ட கோதுமை வயல்களில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது. தினமும் சண்டிகரிலிருந்து இந்தக் குழுவினர் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இங்கு எடுக்கப்பட்டுவரும் ஒரு பாடல் காட்சிக்கு பிருந்தா மாஸ்டர் நடனக் காட்சிகளை அமைத்துள்ளார். இதில் ஹன்சிகா லுங்கி சட்டையுடன் நடனமாடும் காட்சி சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று தயாரிப்புக் குழு தெரிவிக்கின்றது
மேலும் சினிமா செய்திகள்
No comments: