கொழும்பில் தற்கொலைத்தாக்குதல் நடத்த வந்த பெண்போராளி உயிருடன் பிடிபட்டார்! அவருடன் சில நிமிடங்கள்!! அதிர்ச்சி Video,Photos
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த இராணுவத்திடம் பிடிபட்ட தற்கொலைப் போராளிகள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ஊடகவியலாளர்கள் சந்தித்து பேச முடிகின்றது.இவ்விதம் முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்படுள்ளவர்களில் ஒருவர் இராஜேஸ்வரி.
தற்கொலைத்தாக்குதலை நடத்த வந்த போது தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிய இராஜேஸ்வரி உயிருடன் பிடிபட்டார்.தென்னிலங்கை மீதான தற்கொலை தாக்குதல்களை இப்போதும் நியாயப்படுத்தி பேசுகின்றார்.
இவ்வாறு பேசுகின்ற அளவுக்கு முகாமில் சுதந்திரம் இருக்கின்றமை அவதானிக்க முடிகின்றது.ஆனால் இவரைப் போன்றவர்களுக்காக வெளியில் இருந்து குரல் கொடுக்க இன்று யாருமே இல்லை.
இவரை நேரில் கண்டு பேசியுள்ளார் அல்ஜசீரா தொலைக்காட்சி நிருபர்.இராஜேஸ்வரி தமிழில் சொன்ன விடயங்கள் ஆங்கிலத்தில் மொழியெர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
இதே நேரம் கொழும்பில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டு மடிந்தவர் மேஜர் சசி. இவரின் தாயையும் நேரில் சந்தித்து பேசி இருகின்றார் நிருபர்.
மேஜர் சசியின் புகைப்படங்கள் இன்றும் புலிச் சீருடையுடனேயே வீட்டுச் சுவர்களில் மாட்டி வைக்கப்பட்டுள்ளன.இவர் தற்கொலைத்தாக்குதலுக்கு புறப்படுவதற்கு முன்னர் தலைவர் பிராபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வீட்டில் உள்ளன.
இதே நேரம் மகள் விடயத்தில் பெரிதும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றார் என்று கூறுகின்றார் மேஜர் சசியின் தாய்.இவரை பொறுத்த வரையில் மகள் ஒரு மாவீரர்.
ஆனால் புலிகளின் தற்கொலைத்தாக்குதலில் 30 வயது மகளையும்.2 1/2 வயது பேரக்குழந்தையையும் பறி கொடுத்த சிங்கள தாய் ஒருவரையும் நிருபர் சந்தித்து உள்ளார்.இத்தாயின் கண்ணீர் வேறு கதையை கூறுகின்றது.
No comments: