Header Ads

உலகநாயகனுடன் களமிறங்கும் லிங்குசாமி

சினிமா உலகில் தனது நடிப்பினை காட்ட முடிவெடுத்துள்ளாரம் லிங்குசாமி.
திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர் என்ற இரு முகங்களை மட்டுமே காட்டிவந்த லிங்குசாமி தற்போது தனது மூன்றாவது முகமான நடிகன் என்ற முகத்தையும் காட்டவிருக்கிறார்.

பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரித்த இவர் முதன் முறையாக உலகநாயகனை வைத்து உத்தம வில்லன் என்ற படத்தினை தயாரிக்கிறார்.

இப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இந்நிலையில் இதில் லிங்குசாமியும் நடிப்பதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப்படத்தில் நீங்களும் நடிக்கணும் என்று உலகநாயகன் அன்புக்கட்டளையிட உடனே அடிபணிந்துவிட்டாராம் லிங்குசாமி.

No comments:

Powered by Blogger.