முதல் முறையாக இணையும் பாலிவுட் ஜோடி

முதல் முறையாக ரித்திக் ரோஷனுடன் ஜோடி சேரவிருக்கிறார் தீபிகா படுகோனே.
பாலிவுட்டின் பெரும்பாலான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தீபிகா படுகோனே இதுவரையில் ரித்திக் ரோஷனுடன் எந்தப் படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை.
தற்போது அந்த குறையும் விரைவில் தீரப்போகிறது.
‘க்ரிஷ் 3’ படத்தைத் தொடர்ந்து ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறார் ரித்திக் ரோஷன்.
இந்தப் படத்தில் ரித்திக்கின் ஜோடி தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது

No comments: