Header Ads

மீண்டும் சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா

மீண்டும் ஊதா கலரு ரிப்பனோடு ஜோடி சேரவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஜோடி சேர்ந்தவர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடி.

இதனைத் தொடர்ந்து இரு ஜோடிகள் கைவசமும் படங்கள் குவிந்ததால் தற்போது கோடம்பாக்கத்தை கலக்கி கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கயிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.

தற்போது தனுஷ் தனது சொந்த தயா‌ரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஸ்ரீதிவ்யாவை கமிட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சலை இயக்கியவரே இந்த புதிய படத்தையும் இயக்குவார் என தெ‌ரிகிறது.

No comments:

Powered by Blogger.