Header Ads

பிரபுவின் மகளாக ஹன்சிகா

ஹன்சிகா நடித்து தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற “தேனிகா நானா ரெடி” என்ற படம் தமிழில் ”நாங்க எல்லாம் அப்பவே அப்படி” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷ்ணு மோகன்பாபு நடிக்க, கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார்.

முக்கிய வேடத்தில் பிரபு நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சுமன், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ், ராஜேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தனது தங்கை இன்னொரு மதத்தை சேர்ந்தவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டதால் கோபப்பட்ட பிரபுவின் ஆட்கள் சுமனின் காலை வெட்டி விடுகிறார்கள்.

அதனால் பிரபுவிற்கும், தங்கை கணவர் சுமனுக்கும் மோதல் அதிகமாகிறது.அந்த இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க ஒரு இளைஞன் வருகிறான். அவனுக்கும், பிரபு மகளுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் படத்தின் கதை.

இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

No comments:

Powered by Blogger.