கணவனை கொலை செய்த பெண் 12 ஆண்டுகளுக்கு பின் கைது
கணவனை கொலை செய்த பெண்ணொருவர் 12 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாந்தோட்டை வலஸ்முல்லை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை தொடர்பில் வலஸ்முல்லை மற்றும் தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளை அடுத்தே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண் சிலருடன் இணைந்து தனது கணவனை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்ததாக சந்தேக நபரான பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments: