Header Ads

ஷோலே’ 3-டி படத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வாபஸ்: இந்தியா முழுவதும் இன்று ரிலீஸ்

இந்திய சினிமாவின் முதல் 10 சிறந்த திரைப்படங்களின் வரிசையில் என்றென்றும் நீங்காத இடத்தை பெற்றுள்ள இந்தி திரைப்படம் 'ஷோலே'.

தர்மேந்திரா, அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி, ஜெயா பச்சன் மற்றும் அறிமுக வில்லன் அம்ஜத் கான் ஆகியோரை புகழ் ஏணியின் உச்சியில் அமர வைத்து அழகு பார்த்த ஷோலே திரைப்படம் 1975ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.

'ஏ..தோஸ்தி', 'மெஹ்பூபா.. மெஹ்பூபா' போன்ற காலத்தால் அழிக்க முடியாத இனிய பாடல்கள் கொண்ட இந்த திரைப்படம் 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முப்பரிமாண 3-டி தொழில் நுட்பத்தில் 25 கோடி ரூபாய் செலவில் மெருகூட்டப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் இத்திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடனும், நவீன 3-டி மற்றும் டி.ட்டி.எஸ். தொழில் நுட்பத்துடனும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக இதற்கான பணிகள் விறு விறுப்பாக நடந்தது. தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது. ‘ஷோலே’ படத்தை 3-டியில் மாற்றுவதற்காக ரூ.20 கோடி செலவாகியுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். 
இந்த படத்தை தயாரித்த போது ரூ.4 கோடிதான் செலவாகி இருந்தது என்பது குறிப்பித்தக்கது.


‘ஷோலே’ 3-டி இந்தியா முழுவதும் இன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதற்கிடையில், ’இந்திய சினிமா மற்றும் காப்பிரைட் சட்டங்களின்படி, என்னிடம் அனுமதி பெறாமல் எனது மருமகன்கள் ஷோலே படத்தை 3-டியில் தயாரித்து வெளியிட்டுள்ளனர். எனவே, இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்’ என இப்படத்தின் இயக்குனர் ரமேஷ் சிப்பி மும்பை ஐகோர்ட்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட், தடை விதிக்க மறுத்து விட்டது. இதனையடுத்து, ஷோலே’ 3-டி படத்திற்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அவசர மனு ஒன்றினை அவர் தாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்சின் முன் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், ‘ஷோலே’ 3-டி படத்திற்கு தடை விதிக்க கோரிய தனது மனுவினை இயக்குனர் ரமேஷ் சிப்பி இன்று வாபஸ் பெற்றார். இதனையடுத்து, இந்தியா முழுவதும் ‘ஷோலே’ 3-டி இன்று ரிலீஸ் செய்யப்பட்டது.சென்னையில் சத்யம், மாயாஜால், அபிராமி, சங்கம், ஐனாக்ஸ், உள்ளிட்ட திரையரங்கங்களில் ‘ஷோலே’ 3-டியின் முதல் காட்சி தொடங்கியது. 

காலையில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்களின் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி 3-டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள ‘ஷோலே’வை கண்டு ரசிக்க ஆவலுடன் தியேட்டர்களின் உள்ளே சென்றனர்.

No comments:

Powered by Blogger.