Header Ads

யாழினிக்கும் பீட்டருக்கும் மூட் மூட்


''மூட் மூட்!'' - இது ஹன்சிகா.
''ஏம்மா ஏன்? எதுனா தப்பா நினைச்சுக்கப் போறாங்க. நாங்க நடிக்கிற 'மான் கராத்தே’ பட டைரக்டர் திருக்குமரன் ஒரு அப்பாவி மனுஷன். யாரையும் திட்ட மாட்டார். ஷாட்டுக்குப் போகும்போது 'ரெடி ரெடி... மூட் மூட்’னு சொல்லி எங்களை உற்சாகப்படுத்துவார். 'சீனுக்கு ஏத்த மூட் கொண்டுவாங்க’னு அர்த்தம். அதைத்தான் மேடம் இமிட்டேட் பண்றாங்களாம். அதாவது, 'சிவகார்த்திகேயன் - ஹன்சிகா’ இணைந்து கலக்கும் டூயட் பேட்டிக்கு மூட் செட் பண்றாங்களாம்!'' என்று 'வெல்கம் இன்ட்ரோ’ கொடுக்கிறார் சிவகார்த்திகேயன்.
''டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்தான் இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை. மொத்தமே 20 நிமிஷம்தான் கதை சொன்னார். அவர் கதையை ஆரம்பிச்சவிதமும், கொண்டுபோனவிதமும், முடிச்சவிதமும் எக்ஸலென்ட். தன் இணை இயக்குநருக்காக ஒரு டைரக்டர் இவ்வளவு மெனக்கெடணும்னா, திருக்குமரன் எவ்வளவு சின்சியரா அவர்கிட்ட வேலை பார்த்திருப்பார்? முருகதாஸ் சார் கதை சொன்ன அதே எனர்ஜியோட திருக்குமரன் படம் எடுத்திருக்கார்!'' என்ற சிவகார்த்திகேயனை, ''மூட்... மூட்... நான் பேசுறேன்!'' என்று இடைமறிக்கிறார் ஹன்சிகா.
''படத்தில் என் பேர் 'யாழினி’. அப்பாவி அழகி கேரக்டர். எல்லா கேம்ஸும் பிடிக்கும். ஆனா, எதுவும் விளையாடத் தெரியாது. இந்தப் படத்துல சிவா ஒரு பாக்ஸர்!'' என்று லீடு எடுத்துக்கொடுக்க, 'போட்டுக் கொடுத்துட்டியா?’ என்பது போல பார்த்துவிட்டுத் தொடர்கிறார் சிவா.

''ஆமாங்க... ஒரு வீக் பார்ட்டி எப்படி பாக்ஸர் ஆகுறான்... இதுதான் கதை. என் கேரக்டர் பேர் 'பீட்டர்’. ஸ்பைக் ஹேர்ஸ்டைல், ட்ரிம் மீசைனு ராவடி கெட்டப். யாழினியை விடாமத் துரத்தித் துரத்திக் காதலிப்பேன். அதே சமயம் வாழ்க்கையையும் மிஸ் பண்ணாம ஜெயிக்கிறேனாங்கிறதுதான் கதை!''
''நான் இங்க சிவா பத்தி ஒண்ணு சொல்லியே ஆகணும். எனக்கு ரெண்டு சிவா தெரியும்'' என்று ஹன்சிகா சஸ்பென்ஸ் வைக்க, ஆர்வமாகப் பார்க்கிறார் சிவா. ''அதாவது கேமரா ரோல் ஆகிறதுக்கு முன்னாடி ஒரு மாதிரி இருக்கிறவர், 'ரோல் ஆன பிறகு வேற மாதிரி மாறிடுவார்'' என்று ஹன்சிகா பாராட்டுப் பத்திரம் வாசிக்க, ''அய்யே... மொக்கை!'' என்கிறார் சிவா.
''சரி, கொஞ்சம் பெர்சனல் பேசிக்கலாமே! ஹன்சிகா நடிச்சதில் உங்களுக்குப் பிடிச்ச படம் எது?'' இந்தக் கேள்வி சிவகார்த்திகேயனுக்கு.
'' 'எங்கேயும் காதல்’. ஏன்னா, அவங்க நடிச்ச ஒரே படம் அதுதான்!'' என்று சிரிக்கிறார் சிவா. ஹன்சிகா புரியாமல் முழிக்க, ''உங்களைப் பத்தி உயர்வாச் சொன்னேன்'' என்று சமாளித்தார்.
''சிவா நடிச்சதில் உங்களுக்குப் பிடிச்ச படங்கள் என்னென்ன ஹன்சிகா?''
''நான் சிவா நடிச்ச படம் எதுவும் பார்க்கலை. ஆனா, அவர் ஆடின ரெண்டு டான்ஸ் பார்த்திருக்கேன். 'பூமி என்னைச் சுத்துதே...’ அப்புறம் 'ஊதாக் கலர்..!’ இப்போ அவர் செட்டுக்குள்ள வரும்போதே, 'ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்’னு பாடித்தான் வெல்கம் பண்ணுவேன்!'' என்று ஹன்சி சிரிக்க, ''பாருங்க சார்... சீனியர், ஜூனியரை ராகிங் பண்றாங்க!'' என்றதும் சட்டென்று கோபம் வந்துவிட்டது ஹன்சிகாவுக்கு. ''ஹலோ... எனக்கு 22 வயசுதான் ஆகுது. அதனால் இங்கே நான்தான் ஜூனியர்!'' என்றார். ''வெச்சுக்கங்க... யாருக்கு வேணும் உங்க ஜூனியர் பட்டம்!'' என்று பம்மினார் சிவா.
ஹன்சிகாவிடம், ''இன்னைக்கு தமிழ் சினிமா ஹீரோக்களில் 'எலிஜிபிள் பேச்சுலர்’ யார்? நான் சொல்ற சாய்ஸ்ல இருந்து டிக் பண்ணுங்க... ஆர்யா, சிம்பு, விஷால்!'' என்று கேட்டதும், பல நிமிடங்கள் யோசித்தார் ஹன்சிகா. 'நல்லா மாட்டிக்கிட்ட... இதுவும் வேணும்... இன்னமும் வேணும்’ என்பது போன்ற ரியாக்ஷனோடு காத்திருந்தார் சிவா.
''நீங்க சொல்ற மூணு பேரையும் எனக்கு நல்லாத் தெரியும். அதனால மூணு பேரையும் நான் யோசிக்கலை'' என்ற ஹன்சிகா, சிவாவிடம் கேள்வியைத் திருப்பிவிடுகிறார். ''ஹன்சிகா, காஜல், சமந்தா - இந்த மூணு பேர்ல லவ்லி கேர்ள் யார்? சொல்லுங்க''.
யோசித்த சிவா, ''மத்த ரெண்டு பேர்கூடவும் நான் நடிக்கலை. அவங்க எனக்கு ஃப்ரெண்டும் கிடையாது. அதனால ஹன்சிகானு வேற வழியில்லாம வெச்சிக்கலாம்!'' என்று சொல்ல, செல்லமாக முறைக்கிறார் ஹன்சிகா. ''ஓ அப்போ, அடுத்து காஜல்கூட வொர்க் பண்ணீங்கனா 
காஜல்னு சொல்வீங்க... சமந்தாவோட நடிச்சா சமந்தானு சொல்வீங்களா? நீங்க டிப்பிக்கல் சினிமா ஆள்'' என்று ஹன்சிகா சொல்ல, 'நல்ல பேர் கிடைச்சிருச்சே நமக்கு’ என்று சிரிக்கிறார் சிவா.

''ஹன்சிகா, உங்களுக்குப் பிடிச்ச தமிழ் வார்த்தைகள் என்னென்ன?'' என்று சிவா கேட்க, ''எனக்குத் தமிழ் ரொம்பப் பிடிக்கும். தெலுங்கைவிட தமிழ் ஈஸியா இருக்கு. நான் அடிக்கடி 'சும்மா’ங்கிற வார்த்தையை யூஸ் பண்ணுவேன். அடுத்ததா 'பாவம்''’ என்கிறார் ஹன்சிகா. ''இவங்க சும்மாவே உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்துட்டு 'புரடியூஸர் பாவம்’னு யாராவது நல்ல மனுஷன் வாய்விட்டுச் சொல்லியிருப்பான். அதான் இவங்களுக்கு ரெண்டு வார்த்தை தெரிஞ்சிருக்கு'' என்று சிவா சிரிக்க, ''யூ நாட்டி... கூடவே இருந்துட்டு என்னை காலி பண்றியே!'' என்று ஜாலி பன்ச் விடுகிறார் ஹன்சிகா.

No comments:

Powered by Blogger.