Header Ads

ஒடிசாவில் பயங்கரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

ஒடிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 15 வயதே நிரம்பிய மாணவியை, அப்பெண்ணின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜன் பாய் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

அங்குள்ள ஓரிடத்தில் மாணவி குளித்து முடித்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது வழிமறித்த ராஜன் அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது மாணவி உதவி கேட்டு கதறியபோது அங்கு விரைந்து வந்த பொதுமக்கள் மரத்தின் பின்னால் மறைந்திருந்த அவனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். 

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி அழுதுகொண்டே தனது வீட்டிற்குள் ஓடினாள். அவளது பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்த சூழ்நிலையில் தனியாக இருந்த மாணவி, கதவைத் தாழிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 

தற்கொலை செய்து கொண்ட மாணவி படிப்பில் படு சுட்டி என கூறப்படுகிறது. ராஜனை கைது செய்த போலீசார், அவனிடம் விசாரணை நடத்தினர். அவன் மீது இ.பி.கோ 354 மற்றும் 306 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.