பொலிஸ் நிலையம் எதிரில் விபச்சாரம்
சென்னை பாரிமுனை சட்டக்கல்லூரி பொலிஸ் நிலையம் எதிரில் சொகுசு காரில் விபசாரம் செய்த அழகிகள் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.
பாரிமுனை பகுதியில் ஒரு கும்பல் சொகுசு காரை நிறுத்தி வைத்துக்கொண்டுஅதில் இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்கிறார்கள் என்று விபசார தடுப்பு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில், உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் பொலிசார் அடங்கிய சிறப்பு படையினர், நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை வேட்டை நடத்தினார்கள்.
அப்போது சட்டக்கல்லூரி பொலிஸ் நிலையம் எதிரில் ஒரு சொகுசு கார் நின்று கொண்டிருந்தது.
அந்த காரை முற்றுகையிட்டு தனிப்படை பொலிசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு காருக்குள் 2 வெளிமாநில இளம்பெண்கள், 2 வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த விபச்சார ஏற்பாடுகளை பொலிஸ் நிலையம் எதிரில் துணிச்சலாக செய்திருந்த புரோக்கர்கள் சம்சுதீன்( 45), விஜயராகவன்(24), கணேசன்(28),சவுந்திரபாண்டியன்(24) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அழகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments: