Header Ads

விஜயகாந்துடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று மாலை 6.10 மணியளவில் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அப்போது, ஜி.கே.வாசனுக்கு விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். விஜயகாந்த் மகன் சினிமாவில் அறிமுகமாகியுள்ளது குறித்தும் ஜி.கே.வாசன் கேட்டறிந்தார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.