Header Ads

பிரசன்னாவுக்கு முத்தம் கொடுத்த ஓவியா

பிரசன்னாவுடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஓவியா.
ஓவியா தற்போது மலையாள சாப்பாகுரிசு படத்தின் தமிழ் ரீமேக்கான புலிவால் படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சாப்பாகுரிசு படத்தில் ரம்யா நம்பீசன் நடித்த முத்த காட்சி அங்கு அப்போது ஹாட் டாபிக். இப்போது ரம்யா நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஓவியாவும் அதே மாதிரி பிரசன்னாவுடன் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சாப்பாகுரிசு படத்தை 10 தடவையாவது பார்த்திருப்பேன். அதுல வர்ற முத்தக்காட்சி பற்றி எனக்குத் தெரியும். தெரிஞ்சுதான் நடிக்க ஒத்துக்கிட்டேன்.

ரம்யாவும் என்னை மாதிரி ஹோம்லியா நடிக்கிறவங்கதான். அவுங்களே கிஸ் பண்ணி நடிச்சிருக்குறப்போ நான் நடிக்க கூடாதா. அந்த சீன் நிச்சயமாக எந்த உணர்ச்சியையும் தூண்டாது நெகிழ்ச்சியாத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.