Header Ads

ஹீரோயின்-இயக்குனர் மோதல் காமசூத்ரா படம் வெளியாகுமா?

காமசூத்ரா பட ஹீரோயின் ஷெர்லின் சோப்ரா, இயக்குனர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால், இந்த படத்தில் இருந்து நடிகை வெளியேறினார். இந்தியில் முப்பரிமாணத்தில் உருவாகிறது காமசூத்ரா படம். ருபேஷ் பால் இயக்குகிறார். இதில் டாப்லெஸ் நடிகை ஷெர்லின் சோப்ரா, இளவரசி வேடத்தில் நடித்து வந்தார். இதன் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் நிலையில், படத்திலிருந்து தான் விலகி விட்டதாக ஷெர்லின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர், காமசூத்ரா படத்துக்காக 5 நாள்தான் ஷூட்டிங்கில் பங்கேற்றேன். என்னிடம் சொன்னதுபோல் படத்தை எடுக்காமல், இயக்குனர் திடீரென்று ஸ்கிரிப்ட்டை இஷ்டத்துக்கு மாற்றி இருக்கிறார். 

என்னை வைத்து ஷூட்டிங் ஆரம்பித்த பின்புதான் படத்துக்கு தயாரிப்பாளரையே அவர் தேடிக்கொண்டிருக்கிறார். எனவே, இப்படத்திலிருந்து நான் வெளியேறிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதுபற்றி இயக்குனர் ருபேஷ் பால் கூறும்போது, என் படத்திலிருந்து ஷெர்லின் வெளியேறி விட்டார் என்ற தகவலை பத்திரிகையில் வந்த செய்தியை பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். ஒரு இயக்குனராக இப்படத்துக்கான எல்லா காட்சிகளையும் நான் படமாக்கி விட்டேன். விளம்பரத்துக்கான சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. 

மேலும் ஷெர்லின் எப்போது படத்திலிருந்து வெளியேறினார் என்பது இன்னும் எனக்கு புரியவில்லை. அவர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். காமசூத்ரா படம்தான் அவர் ஒரு நடிகை என்பதையே உலகுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது என்றார். இந்த மோதலால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. -

No comments:

Powered by Blogger.