ஆவா’ எனப்படும் குழுவின் பெண் தலைவரை கண்டுபிடிக்க உதவி கோரல்.
யாழ் மாவட்டத்தை கலங்கடித்த ‘ஆவா’ எனப்படும் குழுவின் பெண் தலைவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மேற்படி குழுவைச் சேர்ந்த தலைவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக 16பேர் ஆயுதங்களுடன் யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவு பலவற்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இப்பெண் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது.
இரவு வேளைகளில் குறித்த பெண் நடமாடுவதாகவும், கொக்குவில் பிறவுன் வீதியை சேர்ந்த ***** ***** (வயது 23) என்பவரே இவர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
வடக்கில் இயங்கி வந்த பாதாள உலகக்குழு கைது
வடக்கில் இயங்கி வந்த பாரியளவிலான பாதாள உலகக் குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“ஹவா குரூப்” என்ற பாதாள உலகக் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கும்பலிடமிருந்து கைக்குண்டுகள், போதைப் பொருள், வாள்கள், வேறும் ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றன மீட்கப்பட்டுள்ளன.
தென் இந்திய திரைப்படங்களில் காண்பிக்கப்படும் தாதாக்களைப் போன்று இவர்கள் வடக்கில் செயற்பட்டுள்ளனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குமரேசன் வினோதன் என்ற இளைஞரே இந்தக் கும்பலுக்கு தலைமை வகிக்கின்றார்.
இள வயதுடைய 20 தமிழர்கள் இந்த பாதாள குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கைகளை வெட்டி காயப்படுத்தியவர்கள் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஓராண்டுக்கு மேல் இந்த பாதாள கும்பல் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments: