Header Ads

சூர்யாவின் அடுத்த படம் கல்யாணராமன்

சூர்யா - வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு 'கல்யாணராமன்' என்று தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்குப் பிறகு சூர்யா, வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தெரியாத ஒன்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுவிட்டதாம். ஆமாங்க, சூர்யா - வெங்கட் பிரபு கூட்டணி படத்திற்கான தலைப்பு 'கல்யாணராமன்' என்று தகவல் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக இப்படத்தை உருவாக்கப் போகிறார்களாம். பொதுவாகவே, வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் இப்படிப்பட்ட பாணிதான் இருக்கும். அதையே, இந்த படத்திலும் செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இதுல கவனிக்க வேண்டியதது என்னனா...லிங்குசாமி இயக்கும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்பட வில்லை. கல்யாணராமன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தப் படத்தில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி நடித்திருந்தனர்.

No comments:

Powered by Blogger.