Header Ads

விஜய் - ப்ரியங்கா சோப்ரா ஜோடியை இணைத்து வைத்த பர்சனல் மேனேஜர்

விஜய் நடித்த ஜில்லா வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மற்றொரு படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த படத்தை அவரிடம் நீண்டகாலமாக பர்சனம் மேனேஜராக பணிபுரியும் பி.டி. செல்வகுமார் என்பவர் தயாரிக்கிறார் என்பதுதான் முக்கிய செய்தி.

பி.டி. செல்வகுமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஆமாம் விஜய் படத்தை நானும், தமீன் மூவிஸும் இணைந்து தயாரிக்க உள்ளோம். நீண்டகாலமாக மேனேஜராக பணிபுரியும் என்னையும், விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளராக மாற்றியதற்காக அவருக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். 

ஏ.ஆர். முருகதாஸ் படம் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 2014ஆம் ஆண்டின் இறுதியில் தங்கள் படம் வெளிவரும் என்றும் செல்வகுமார் கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு நடிக்க இருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.

No comments:

Powered by Blogger.