நஸ்ரியா என்னை மணப்பது பெரிய ரிஸ்க் : பஹத் ஷாக் பேட்டி
சாகும்வரை நஸ்ரியாவை கைவிடமாட்டேன் என்றார் பஹத் பாசில். நேரம், நய்யாண்டி, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இவர்களது திருமணம் நடக்கிறது. இது இருவீட்டு குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று சொல்லப்பட்டாலும் இருவரும் தீவிரமாக காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது.
இது பற்றி பஹத் கூறியதாவது: எனக்கும் நஸ்ரியாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
என்னை திருமணம் செய்துகொள்வது மிகப்பெரிய ரிஸ்க் மட்டுமல்ல, ஒரு சூதாட்டம் போன்றது. ஒரு பெண் தன்னையே தியாகம் செய்துகொண்டு என் வாழ்க்கை துணையாகிறார். நானும் நஸ்ரியாவும் சந்தித்து பேசினோம் அப்போது அவரிடம் மனதை பறிகொடுத்தேன். என்னுடன் வாழும் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டு எனக்கென்று ஒரு குடும்பத்தை தந்திருக்கிறார்.
என்னுடைய குடும்பத்தினருக்கும் நஸ்ரியாவை நன்கு பிடித்துவிட்டது. பாரம்பரிய முறைப்படியே எங்கள் திருமணம் நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நஸ்ரியா என்னை மாற்றி இருக்கிறார். நான் சாகும்வரை நஸ்ரியாவின் நலனில் அக்கறையுடன் இருப்பேன். ஒருபோதும் அவரை கைவிட மாட்டேன்.
No comments: