சிம்புவை விரட்டியடிக்க அடியாட்களுடன் அலையும் ஹன்சிகா
சிம்புவும் ஹன்சிகாவும் கடந்த சில மாதங்களுக்கு முன் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தபோது சிம்புவின் பழைய காதலி நயன் தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க சிம்பு கமிட் ஆனால்.
இது ஹன்சிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நயன் தாராவுடன் சிம்பு நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டார். ஆனால் சிம்பு அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் இவர்களுடைய காதல் பிரேக் அப் ஆனது.
இந்நிலையில் நயன் தாரா மீண்டும் சிம்புவுடன் உறவை புதுப்பித்துக்கொள்ள விரும்பவில்லை. சக நடிகராக மட்டுமே சிம்புவை பார்த்தார். படப்பிடிற்கிடையே சிம்புவுடன் அவர் பேசக்கூட இல்லை.
இதனால் மனம் வெறுத்த சிம்பு, மீண்டும் ஹன்சிகாவுடன் உறவை புதுப்பித்துக்கொள்ள அவர் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கெல்லாம் தேடிச்சென்றதாக தெரிகிறது.
ஆனால் சிம்புவின் தொல்லையில் இருந்து விடுபட தற்போது ஹன்சிகா, தனியார் பாதுகாவலர்களுடன் படப்பிற்கு வருகிறார்.
சிம்பு தன்னை பார்க்க வந்தால் விரட்டியடிக்குமாறு அவர் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பழைய காதலியுடன் நெருங்க முடியாமலும், தற்போதைய காதலியுடனும் சேரமுடியாமலும் இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறார் சிம்பு. மீண்டும் இமயமலைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.
No comments: