திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலரை கழட்டிவிட்ட கங்கனா
காதலித்துக்கொண்டிருக்கும் பாய்பிரண்ட் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதால் காதலை பிரேக் அப் செய்ததாக நடிகை கங்கனா ரனாவத் மீது பாலிவுட்டில் பரபரப்பு புகார் ஒன்று எழுந்துள்ளது.
பாலிவுட்டின் கனவுக்கன்னி கங்கனா ரனாவத், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் பாவர்ட்டி என்பவருடன் கடந்த இரண்டு வருடங்களாக பழகிவந்தார். இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் குடும்பம் நடத்துவதாக கிசுகிசு எழுந்தது.
இந்நிலையில் காதலர் நிக்கோலஸ், கங்கனாவை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் கங்கனா, தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் அது ஒரு இம்சையான கமிட்மெண்ட் என்றும் இப்படியே கடைசி வரை வாழலாம் அல்லது இப்போதே பிரிந்துவிடலாம் என கூறிவிட வெறுத்துப் போன காதலர் காதலை பிரேக் செய்துவிட்டு இங்கிலாந்துக்கே போய்விட்டார். தற்போது அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கவிருப்பதாக தெரிகிறது.
தற்போது குயின் என்ற மெகா பட்ஜெட் படத்தில் நடித்துவரும் கங்கனா, கடைசி வரை திருமணமே செய்யாமல், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் துணையுடனே வாழப்போவதாக கூறியுள்ளார். இந்த வாழ்க்கைதான் தனக்கு நிம்மதியை தருவதாகவும், திருமணம் என்பது ஒரு ஜெயில் வாழ்க்கை போன்றது என்றும் கூறியுள்ளார். திருமணம் குறித்து அவர் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments: