Header Ads

ஸ்பெஷல் வகுப்பில் மாணவிக்கு முத்தமழை

விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தி 10ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் கருங்கல் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார். கடந்த 17 ம் திகதி நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

எனினும் அந்த ஆசிரியர் மட்டும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியிலேயே சிறப்பு வகுப்பு வைத்திருந்தார். ஒரு அறையில் மாணவிகளுக்கு மொத்தமாக பாடம் நடத்திய அவர் மறு அறையில் தனித் தனியாக மாணவிகளை அழைத்து கேள்விகளை கேட்டுள்ளார்.

அப்போது ஒரு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்துள்ளார், ஆசிரியரின் செய்கையால் அதிர்ச்சியடைந்த மாணவி அவரின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

அவர் பதட்டத்துடன் ஓடி வருவதைப் பார்த்த சக மாணவிகள் என்ன நடந்தது என விசாரித்த போது அந்த மாணவி தனக்கு நடந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் கொதிப்படைந்தனர்.

சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆங்கில ஆசிரியர் மீது தலைமை ஆசியரிடம் புகார் கூறியுள்ளனர். உடனே அந்த ஆசிரியரை அழைத்து விசாரித்த போது மாணவியின் தவறை சுட்டிக் காட்டிய தன் மீது பொய் புகார் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த ஆசிரியர் மீது கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மறுநாள் முதல் பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இது அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Powered by Blogger.