Header Ads

ரம்யாவை எதிர்த்து களமிறங்கும் ரக்ஷிதா

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புவதாக நடிகை ரக்ஷிதா தெரவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதி எம்.பி.யாக நடிகை ரம்யா இருந்து வருகிறார். அவர் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் களம் இறங்குகிறார்.

இந்நிலையில், மண்டியா தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிட நடிகை ரக்ஷிதா விரும்புகிறார்.

இதுகுறித்து அவர் மண்டியாவில் நிரூபர்களிடம் கூறுகையில், மண்டியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

மேலும்இந்த விடயத்தில் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். நான் நடிப்பதைவிட்டுவிட்டதால் என்னை இனி நடிகை என்று கருத வேண்டாம், எந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன், அந்த அளவுக்கு எனக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது.

அதற்காக நான் கட்சி மாறுவதாக அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஜனதா தளம் (எஸ்) கட்சியிலேயே இருக்கிறேன். இந்த கட்சி சார்பிலேயே போட்டியிடுகிறேன் என்றும் ஒருவேளை போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.