Header Ads

வீரம்' - ஒரு கண்ணோட்டம்!

விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் படம் 'வீரம்'. இப்படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

சிவாவின் இயக்கத்தில் உருவாகும் 'வீரம்' படப்பிடிப்பு நடந்த ஒரு கிராமத்துக்கு அஜித் உணவு பரிமாறினார். கிராமத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சாப்பிட்டனர். இது மெகாபந்தியாக இருந்தது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்னைகளே படத்தின் கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜித் பிறகு ஆவேசமாகி ஆக்ஷனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

ஒடிசா பார்டரில் ஓடும் ட்ரெய்னில் அரக்கப்பரக்க ஒரு ஆக்‌ஷன் காட்சியை படம்பிடித்திருக்கிறார்கள். டூப் போடலாம் என சிவா சொன்னதற்கு, தல மறுத்துவிட்டார். முழுக்க முழுக்க ட்ரெய்னில் நடக்கும் இந்த சண்டைக்காட்சியில் அஜித் ஆக்‌ஷனில் அசரடித்திருக்கிறார்.

படத்தில் அஜித் வேட்டி சட்டை அணிந்து வருகிறார். ஒரு காட்சியில் இரண்டு கி.மீ மாட்டு வண்டி ஓட்டி நடித்து இருக்கிறார்.அந்தக் காட்சி முடிந்ததும் "பிஎம்டபிள்யூ ஓட்டுனவனை மாட்டு வண்டி ஓட்ட வச்சுடீங்களேப்பா" என்று கிண்டலாக அஜித் ஜாலியாகச் சொல்லி சிரித்தார். 

விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா நடிக்கிறார். ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுக்கும்படி  அபிநயா நடித்திருக்கிறார்.

அபிநயாவின் நடிப்பைப் பார்த்து அசந்துபோன அஜித், இயக்குநரை அழைத்து அபிநயா சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகப்படுத்தச் சொன்னார். 

No comments:

Powered by Blogger.